முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி, தமிழ் புலிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கோவையில், தமிழ் புலிகள் அமைப்பினர் முழக்கங்களை எழுப்பியபடியே, ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
மேலும், 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், ஆளுநர் காலதாமதம் செய்து வருவதாகவும் கூறிய போராட்டக்காரர்கள், 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து முற்றுகையிட முயன்ற 24 பேரை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படியுங்கள்: நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல்: உயர் நீதிமன்றம் வேதனை