ETV Bharat / state

'மனிதர்களை வளமாக பார்க்கக்கூடாது; சாத்தியமாக பார்க்க வேண்டும்..!' - ஜக்கி வாசுதேவ்

author img

By

Published : Aug 5, 2022, 10:20 PM IST

ஈஷா லீடர்ஷீப் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'Human Is Not a Resource' என்ற பெயரிலான 3 நாள் தலைமைப்பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் புதன்கிழமை(ஆக.3) தொடங்கியது.

’மனிதர்களை வளமாக பார்க்கக் கூடாது சாத்தியமாக பார்க்க வேண்டும்..!’ - ஜக்கி வாசுதேவ்

கோவை: ஈஷா லீடர்ஷீப் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'Human Is Not a Resource' என்ற பெயரிலான 3 நாள் தலைமைப்பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் புதன்கிழமை(ஆக.3) தொடங்கியது. இதில் பல்வேறு துறைகளைச்சேர்ந்த வர்த்தக தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தலைமைப்பொறுப்புகளில் இருப்பவர்கள் பங்கேற்றனர்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான அளவுகோலை பின்பற்ற கூடாது-முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்
எல்லோருக்கும் ஒரே மாதிரியான அளவுகோலை பின்பற்றக்கூடாது-முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்

இன்று(ஆக.5) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு வெற்றி பெற வேண்டுமானால், அதற்கென்று நன்கு கட்டமைக்கப்பட்ட வழிமுறைகள் இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான அளவுகோலை பின்பற்றக்கூடாது - முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்

இதற்கு மேற்கு இந்திய கிரிக்கெட் அணியையும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையும் உதாரணமாக சொல்லலாம். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டிற்கென்று அகாடமி உள்ளது. அவர்கள் வீரர்களின் திறமைகளை நன்கு ஊக்குவிக்கிறார்கள். இன்றும் கூட அந்நாட்டில் ஒருவருக்கு 38 வயது ஆகியிருந்தாலும் அவரிடம் திறமை இருந்தால், அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஆட முடியும்.

அவர்கள் வயதை ஒரு தடையாக பார்க்கவில்லை. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து நிலையான வெற்றியை தக்கவைத்துக்கொண்டுள்ளார்கள். இதேபோல், உங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து சிறப்பாகப்பணியாற்றிய ஒருவர், தற்போது சவாலான கட்டத்தில் தவிக்கிறார் என்றால் நீங்கள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு கோலியை கூறலாம்.

உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அவரை போன்றவர்கள் மீண்டும் வெற்றியின் உச்சத்தை தொடுவதற்கு நீண்ட வாய்ப்பினை வழங்க வேண்டும். நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால், எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒரு அளவுகோலைப்பின்பற்றக்கூடாது’’ என்றார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜக்கி வாசுதேவின் அறிமுக வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜக்கி வாசுதேவ் கூறுகையில், ”மனிதர்களை ஒரு வளமாக பார்க்கக்கூடாது. மனிதர்களை ஒரு சாத்தியமாகப்பார்க்க வேண்டும். சாத்தியத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையே ஒரு இடைவெளி எப்போதும் இருக்கும். நாம் அந்த சாத்தியத்தை வெளிகொணர்கிறோமா இல்லையா என்பதை பொறுத்தே மனிதர்களின் வளர்ச்சி இருக்கும்.

மனிதர்கள் ஒரு விதையைப் போன்றவர்கள். வளமான மண்ணைக்கண்டறியும்போது தான் அந்த விதை அதன் சாத்தியத்தை உணரும். சரியான வளமான மண்ணில் விதைக்கப்படும் ஒரு விதையால் இந்தப் பூமி முழுவதையும் பசுமை ஆக்க முடியும். எனவே, மனிதர்களை நீங்கள் சாத்தியமாகப் பார்க்காமல் வெறும் வளமாக பார்த்தால் அவர்களின் புத்திசாலித்தனத்தை உங்களால் வெளிக்கொணர முடியாது” என்றார்.

இதையும் படிங்க: பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் ஈபிஎஸ் தரப்பு கட்சி நடத்துகிறது - கோவை செல்வராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.