ETV Bharat / state

"திமுகவுக்கு 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் ஆதரவு" - சீமான் போட்ட கண்டிஷன் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 10:48 PM IST

Seeman: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லாமல் திமுக தனித்துப் போட்டியிட்டால், தேர்தலில் இருந்து விலகிக்கொண்டு 40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சீமான் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்: சித்தாபுதூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. "ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், “மொழி என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் உயிர். அதுதான் அடையாளம், இலக்கியம், வரலாறு எல்லாம். உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ், உலகில் தோன்றிய முதல் மாந்தன் தமிழன். இந்தியா முழுவதும் தமிழை கொண்டவர்கள் தான் பரவி வாழ்ந்தனர். தமிழ் தான் இறைவனால் பேசப்பட்டது, தமிழ் தெய்வத்தின் மொழி. தமிழ் மொழி வழிபாட்டை வெளியேற்றிவிட்டு சிவனுக்கு முன்பு சமஸ்கிரதத்தில் வழிபாடு செய்யப்படுகிறது.

திருவாசகம் பாட வேண்டிய இடத்தில் ஏதோ ஒரு மொழியில் நாம் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். உறங்கும் பொழுது வரும் கனவு எந்த மொழியில் வருகிறதோ, அதுதான் கல்வி மொழியாக இருக்க வேண்டும். உறங்கும் பொழுது வரும் கனவு ஆங்கிலத்தில் வந்தால் நீ என் இனத்தைச் சேர்ந்தவன் அல்ல நீ சுவரம் போய்விட்டாய், இனம் மாறிவிட்டார் உன் ரத்தத்தை பரிசோதிக்க வேண்டும். உலகம் முழுவதும் அவரவர் தாய்மொழியின் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. காமராஜர் ஆட்சி காலம் வரை தமிழ் பயிற்று மொழியாகவும் பாட முடியாத ஆங்கிலமும் இருந்தது, பிறகு பாடமொழி தமிழாகவும் பயிற்று மொழி ஆங்கிலமாகவும் இருக்கிறது. பின்பு விருப்பம் மொழி தமிழாக இருந்தது எந்த தமிழனும் விரும்பவில்லை மொழி இறந்து விட்டது.

தமிழர்களுக்கு கடவுள் கிடையாது தெய்வங்கள் தான் உள்ளது, தெய்வமே என்பது எப்படி உருவாகிறது என்றால் எழுத்தறிவித்தவன் இறைவன், எழுத்தறிவித்தான் இறைவன் அவ்வளவு தான். எங்களைப் பொறுத்தவரை இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் இதுதான் எங்கள் கோட்பாடு. இந்திய நிலப்பரப்பு அடிமைப்பட்டு கிடக்கும் பொழுது எங்களுடைய தாத்தாக்கள் எங்களுக்கு செய்த துரோகம் முத்துராமலிங்க தேவரும் பெருந்தலைவர் காமராஜரும் செய்த துரோகம். விடுதலைக்காக போராடும் பொழுது ஆர்எஸ்எஸ் பிஜேபியில் இருந்த ஒருவரும் போராட்டம் நடத்தவில்லை. 1946ல் வரவேண்டிய விடுதலை 1947க்கு தள்ளப்பட்டதற்கு ஜின்னா தான் காரணம்.

ஜின்னா தனி நாடு கேட்கும்போது எங்கள் தாத்தாக்கள் தனி தமிழ்நாடு கேட்டிருந்தால் மவுன்பேட்டன் பிரபுவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அப்போதே தமிழ்நாடு கேரளாவா கர்நாடகாவா என்று தனித்தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டு சென்றிருப்பார். தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழன் ஒருவன் ஆள வேண்டும். அதற்கு நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் கோட்பாடு. சும்மா பேசிக்கொண்டே இருப்பவன் தானே நான் என்று தானே அனைவரும் நினைக்கிறீர்கள். என்னை கைது என்று சொல்லுவார்கள் ஜெயிலில் போடுவார்கள், ஜெயில் கட்டியதே எங்களுக்காகத்தான். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா என்று பலரும் கேட்கிறார்கள் தமிழ் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நிலைப்பாட்டை நான் உருவாக்குவேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர் எதற்கும் கையெழுத்திடாமல் சேட்டை செய்கிறார் என்று கூறுகிறார்கள் ஒரு இரண்டு மூன்று வருடம் பொருங்கள் நான் வந்து விடுகிறேன், முடிந்தால் இதே ஆளுநரை நியமியுங்கள், நான் வந்தால் ஆளுநர் மாளிகையை பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு விடுவேன், மின் இணைப்பு தண்ணீர் தொடர்பை துண்டித்து விடுவேன். மக்களால் நிறுவப்பட்ட ஆட்சிக்கு இல்லாத அதிகாரம் ஒரு நியமன உறுப்பினரான ஓசி சோறு சாப்பிடும் இவருக்கு (ஆளுநர்) எதற்கு இவ்வளவு அதிகாரம். தற்பொழுது தமிழை விட்டுவிட்டு தங்கிலீஷில் பேச தொடங்கிவிட்டீர்கள், நீங்கள் தமிங்கிலர்கள், எனவே இது தமிழ்நாடு அல்ல, தமிங்கில நாடு. தமிழை மீட்க எம்ஜிஆர் போட்ட சட்டத்தை மறுபடியும் புதுப்பித்து கருணாநிதி, ஜெயலலிதா விட்டு சென்றதைப் போல் விட்டு விட மாட்டேன்.

அதற்காக தமிழ் மீட்சி படை என்ற ஒன்றை நான் வைத்திருப்பேன், சொல்லி சொல்லி பார்த்துவிட்டு கேட்கவில்லை என்றால் தமிழ் மீட்சி படையை கொண்டு அந்த கடையை உடைத்து விட்டு தமிழில் பெயர் பலகை வைக்க சொல்லுவேன். இல்லையென்றால் மின்சாரத்தை துண்டித்து விட்டு, கடையை பூட்டி சீல் வைத்து விடுவேன். இங்கு முதலில் தோன்றியது மொழி அந்த மொழியை பேசக்கூடிய மக்களின் கூட்டம் இனம் அதன் பிறகு வெறும் 3000 வருடத்திற்கு முன்புதான் தோன்றியது இந்த சாதி மத கோட்பாடு எல்லாம். என் இனத்திற்கு எதிராக என்னைப் பெற்ற தாய் தந்தையே வந்தாலும் எனக்கு எதிரி தான். தண்ணீரில் உள்ள மினரலை எடுத்து விட்டு தான் மினரல் வாட்டர் என்று விற்கப்படுகிறது, எனவே தண்ணீர் நஞ்சாகிவிட்டது. உணவு நஞ்சாகி விட்டதால் பெரும்பாலும் மக்களுக்கு புற்றுநோய் வருகிறது, மரபணு மாறிவிட்டது.

இனத்தின் விடுதலை என்பதுதான் எங்கள் இலக்கு, இனம் ஒன்றாகும் இலக்கு வென்றாவோம். அரசு சாராயம் இருக்கின்ற பொழுது அரசு சாப்பாடு போடுகின்ற வேலை செய்யக்கூடாதா அதை நான் செய்வேன். ஆடு மாடுகளை வளர்ப்பேன், அரசு பணியையும் அறிவிப்பேன். காலையில் உப்புமா கிடையாது என் பிள்ளைகளுக்கு உயர்ந்த உணவு வழங்குவேன். பல்வேறு அங்காடிகளை திறப்பேன் நாடெங்களும் சம விலை என்பதை உருவாக்குவேன். படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை வழங்குவேன். ஒரு ஐந்து ஆண்டு மட்டும் என்னை ஆட்சியில அமரவையுங்கள். எனக்கு இந்தியாவின் RAW, இந்தியா உழவு படை இந்திய ராணுவம், தமிழ்நாடு காவல் துறை என அனைத்து இடங்களிலும் எனக்கு ஆள் இருப்பது போல் உலகம் முழுவதும் எனக்கு ஆள் உள்ளார்கள்.

எந்த நாட்டின் வானூர்தி நிலையத்திற்குச் சென்றாலும் என்னை கட்டிப்பிடித்து படம் எடுப்பதற்கு ஆள் உள்ளது. அதனால்தான் அவர்கள் என்னை இன்டர்நேஷனல் டெரர் பீஸ் என்று கூறி எனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்து விட்டார்கள். ஒரு நாள் அவர்களே அழைத்து எனது பாஸ்போர்ட்டை வழங்குவார்கள். ஏனென்றால் என்னை நாடு கடத்த வேண்டும் என்றால் பாஸ்போர்ட் தேவைப்படும் அப்போது அவர்களே வழங்குவார்கள். நான் ஆறுகளை பாதுகாப்பேன், அதைச் சுற்றி இரும்பு வேலை போட்டு துணை காவல் நிலையத்தை அமைப்பேன். தற்பொழுது ‘M sand’ என்று மலையையே மண்ணாக பார்க்க தொடங்கி விட்டார்கள். பத்தாண்டு பசுமை திட்டம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து மரம் நடுவதும், வளர்ப்பதும் அரசு பணியாக்கி பிள்ளைகளை நட வைக்கலாம் பலரை இதில் வேலைகளுக்கு பணியமர்த்தலாம்” என்றார்.

மேலும், “தமிழக அரசுக்கும் தனியார் முதலாளிகளுக்கும் கல்வியிலும் மருத்துவத்திலும் சண்டை வருகிறது. தனியார் மருத்துவமனை வைத்திருக்கக் கூடிய உரிமையாளர்களே அரசு மருத்துவம் மனையில் மருத்துவம் பெறும் நிலையை நான் உருவாக்குவேன் அப்படி இல்லை என்றால் நான் பிரபாகரனின் பிள்ளை இல்லை. ‘என் நாடு என் மக்கள்’ என்று நடப்பவன் நான் அல்ல அதை நடத்துபவன் நான். தமிழ் தேசிய இனத்திற்காக நான் போராடுகிறேன் ஆனால் ஐரோப்பியர்கள் போல் போராடுவேன். போராடும் பொழுது செருப்பு போட்டுக் கொண்டு சென்றால் செருப்பை மிதித்து விடுவார்கள் அப்படி இருக்கும் பொழுது வேட்டி கட்டி கொண்டு சென்றாள் வேட்டி எங்கே இருக்கும், அதனால்தான் Pant மாட்டி கட் ஷூ எல்லாம் போட்டுக் கொள்வது. நாங்கள் சிரிக்க சிரிக்க பேசுவோம் ஆனால் சீரியஸாக வேலை செய்வோம்.

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன், அதில் 20 தங்கைகளுக்கு வாய்ப்பளிப்பேன். நன்கு படித்தவர்களை நிறுத்துவேன். எனக்கு நாடாளுமன்ற கனவு இல்லை தமிழ் தேசிய விடுதலை தான் என்னுடைய கனவு. ஒருவேளை எனது தாய் நிலத்திற்குள் குறிப்பாக என் மாவட்டத்திற்குள் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி நின்றால் நான் எதிர்த்து நிற்பேன். நீ எந்த பக்கம் திரும்பினாலும் எதிர்பக்கம் நான் நிற்பேன் என்று தம்பி படத்தில் வசனம் வருவதைப் போல் நீ (மோடி) என் நிலத்திற்குள் எங்கு வந்தாலும் நான் நிற்பேன். ஒருவேளை திமுக உதயசூரியன் சின்னத்தில் மோடியை வீழ்த்துவதற்கு வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்தினால் நான் அமர்த்திய வேட்பாளரை திரும்ப பெற்றுவிட்டு அந்த ஒரு தொகுதியில் திமுகவை ஆதரிப்பேன். ஆனால், திமுக அந்த தொகுதியை கூட்டணிக்கு கொடுத்து விட்டால் நான் நேரடியாக மோதுவேன்.

இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்தால் 40 தொகுதிகளில் இருந்தும் நான் விலகிக் கொண்டு உங்களுக்கு (திமுக) ஆதரிக்கிறேன். குறிப்பாக திமுக எந்தெந்த தொகுதியில் நிற்கிறதோ அந்த 20 தொகுதிகளிலும் வேட்பாளரை நான் திரும்ப பெற்றுக் கொண்டு உங்களுக்கு ஆதரிக்கிறேன். நான் இஸ்லாமிய சிறைவாசிகளின் குடும்பங்களின் நிலை குறித்து ஆவணப்படம் ஒன்று எடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்போது பாதிக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு சென்று அவர்கள் கூறுவதை பதிவு செய்கிறேன் அதில் நாசர் உட்பட அவர்களது பதிவுகளை தந்து விட்டார்கள். ஒரு சிலர் மட்டும் தரவில்லை. அவர்களிடம் கேட்டால் செப்டம்பர் 15 கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து விடுவேன் என்று கூறுகிறார்கள் ஒருவேளை இப்பொழுது இதனை கூறினால் ஏதாவது நடந்து விடுமோ என்று தயங்குகிறார்கள்.

இந்த செப்டம்பர் 15 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் நான் அதனை வாழ்த்தி வரவேற்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் நான் உங்களை ஆதரிக்கிறேன். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். வருகின்ற தேர்தலில் காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் நான் உங்களை (திமுக) ஆதரிக்கின்றேன். நாங்கள் அடிமை இனத்தின் மக்கள், நாங்கள் உரிமை பெற வேண்டும் என்றால் எங்களுக்கு இருக்கின்ற கடைசி வாய்ப்பு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது. அதிகாரத்தை பிடி பிறகு அடி என்பதுதான் எங்களது கோட்பாடு. இலக்கு எதுவும் இல்லாதவர்களிடம் சவால் விடாதீர்கள் என்னிடம் எதுவும் இல்லை. அனைவரும் விவசாய சின்னத்திற்கு வாக்களியுங்கள் புரட்சி எப்போதும் வெல்லும் நாளை மலரும்” என தனது உரையை நிறைவு செய்தார்.

இதனிடையே கூட்டத்திலிருந்து ஆதரவாளர் ஒருவர் சீமானை பார்த்து ஏதோ சொல்ல, அதற்கு சீமான் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிவிட்டு, இப்படி சொல்லி சொல்லித்தான் இரண்டு பேர் என்னை சுற்றித்திரிகிறார்கள் இதில் நீ வேறு.. எனக்கு இது அல்ல பயம் இனி எத்தனை பேர் வருவார்களோ... எது வந்தாலும் பார்த்துக் கொள்ளுவோம்... என்று சிரித்தார். மேலும் ஒரு நாள் வீட்டில் இரவு நேரத்தில் செல்போனில் செல்லக்குட்டி செல்லக்குட்டி என்று பேசிக் கொண்டிருந்தது எனது மாமியார் பார்த்து எனது மனைவியிடம் தெரிவித்தார். அதற்கு என் மனைவி அவர் வடிவேலுவுடன் தான் பேசிக் கொண்டிருப்பார் அவர்களை பொழுதும் அப்படித்தான் பேசிக்கொள்வார்கள் என கூறினார். நானும் வடிவேலும் அப்படித்தான் பேசிக் கொள்வோம் அது அப்படியே பரவி விட்டது, அதை அப்படியே, கில்லி படத்தில் நடிகையைப் பார்த்து பிரகாஷ்ராஜ் செல்லோ... என்று எடுத்து வைத்து விட்டார். அந்த பிட்டு என்னுடைய பிட்டு தான்” என சிரித்தார்.

இதையும் படிங்க: வெற்றிக்கு அச்சாரமிடு வேலூர் பவளவிழா.. திமுக தலைவர் மு.ஸ்டாலின் விடுத்த அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.