ETV Bharat / state

‘ஜூலை 2ஆம் தேதி புதிய மாற்றம் வரும்’ - செங்கோட்டையன் - செங்கோட்டையன்

கோவை: ஜூலை 2ஆம் தேதி நடைபெறவுள்ள பள்ளிக்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கையின்போது பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன்
author img

By

Published : Jun 29, 2019, 10:09 AM IST

சென்னையிலிருந்து கோவை வந்த செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘தமிழ்நாடு அரசு இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மாணவர்களுக்கு புதிதாக கொண்டுவந்துள்ள பாடத்திட்டம் 240 நாட்கள் படிக்க வேண்டியுள்ளது. அதன் காரணமாக மடிக்கணினி வழங்கும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

செங்கோட்டையன்

மேலும், ஜெயலலிதா ஆட்சியின்போது, 37 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் இதுவரை 21 லட்சத்து 20 ஆயிரம் மடிக்கணினிகள் நான்கு கட்டமாக வழங்கியுள்ளோம். 2017-18ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் மடிக்கணினி அடுத்த மூன்று மாதத்தில் வழங்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கான புதிய திட்டங்கள் குறித்து இரண்டாம் தேதி சட்டப்பேரவையில் நடைபெறும் பள்ளிகல்வித்துறை மானியக்கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மனித நேயத்தோடு எல்லோருக்கும் அனைத்து பணியையும் நிறைவேற்ற நினைக்கிறது. ஆனால், இன்று இருக்கும் நிதி நெருக்கடியில் எல்லோரும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை கொண்டு வரும்போது ஆசிரியர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Intro:வருகின்ற 2ம் தேதி நடைபெறவுள்ள பள்ளி கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கையின் போது பல்வேரு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.Body:

சென்னையிலிருந்து கோவை வந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,
தமிழக அரசின் ஒவ்வொரு துறைகளும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள் தமிழகத்தில் நிலவி வருகிறது என்றார் இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக துறைவாரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றவர்,
பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு பிளஸ்-1 பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு படிப்பு முடித்து சென்றவர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு புதிதாக கொண்டுவந்துள்ள பாடத்திட்டம் 240 நாட்கள் படிக்க வேண்டியுள்ளது அதன் காரணமாக மடிக்கணினி வழங்கும் திட்டம் தீவிரப்படுத்த்பட்டுள்ளது.
அம்மா பொறுப்பில் இருந்தபோது 37 லட்சம் மடிக்கணினி வாங்கினார்கள் தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 21 லட்சத்து 20 ஆயிரம் மடிக்கணினிகள் நான்கு கட்டமாக வழங்கி வருகிறோம் என்றார்.
2017-18 ஆம் ஆண்டு பணிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் மடிக்கணினி அடுத்த மூன்று மாதத்தில் வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரைக்கும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது புதிய திட்டங்கள் குறித்து இரண்டாம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறும் பள்ளிகல்வித்துறை மானியக்கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு ஆசிரியர்களை பணியமர்த்தும் போதே ஓய்வூதியத் திட்டத்தை பற்றி தெளிவாகக் கூறி தான் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள், அதைதான் அரசு தற்போது செய்து வருகிறது தமிழக அரசு இதுவரை மனித நேயத்தோடு எல்லோருக்கும் அனைத்து பணியையும் நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாலும் இன்று இருக்கும் நிதி நெருக்கடியில் எல்லோரும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் போது ஆசிரியர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.