கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக.12) மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் சங்கத் தலைவர் மருதாச்சலம் பேசுகையில், "பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் அரசு இலவசமாக மண் பானைகள், அடுப்புகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும்.
மண்பாண்ட தொழிலை நம்பி இருக்கின்ற மக்களுக்கு நல வாரியம் சார்பில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதனை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
இலவசமாக பொதுமக்களுக்கு மண்பானை வழங்கினால் அதன் மூலம் எங்கள் வாழ்வாதாரம் மேன்படும்" என்று தெரிவித்தார். பின்னர் மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து சென்றனர்.
இதையும் படிங்க: காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம்!