இன்று (மே.2) சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்துவரும் நிலையில் அதிமுகவில் கணிசமான இடங்களில் முக்கிய வேட்பாளர்கள் முன்னிலை வகித்துவருகின்றனர்.
அதன்படி தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ். பி. வேலுமணி தனது தொகுதியில் முன்னிலை வகித்துவருகிறார்.
முன்னதாக தொண்டாமுத்தூர் தொகுதியில் அஞ்சல் வாக்குகளை எண்ண அரை மணி நேரம் தாமதமானது. இதையடுத்து 8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க: எல். முருகன் தாராபுரத்தில் முன்னிலை!