கோயம்புத்தூர்: சவுரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். முன்னாள் ராணுவ வீரரான இவர் அப்பகுதியில் காய்கறி கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். அப்போது கடந்த ஆண்டு சாகர் சிபேட், அமுபா அமித் குமார், கணேஷ் என்பவர்கள் அறிமுகமாகியுள்ளார்.
அவர்கள் மகாராஷ்டிரா ஹமத் நகர்ப் பகுதியில் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 50 டன் வெங்காயத்தை மொத்தமாகக் கொள்முதல் செய்ய முடிவு செய்து நடராஜன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 லட்சத்து 50ஆயிரம் ரூபாயை அமுபா அமித் குமாரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
ஆனால், அதன் பின்னர் அவர்கள் இதுவரை வெங்காயத்தை அனுப்பி வைக்காமலும் இதுகுறித்து கேட்டால் முன்னுக்குப் பின் முரணாகப் பதில்களைக் கூறி வந்துள்ளனர்.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பீளமேடு காவல் துறையினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: IAS அதிகாரி போல் நடித்து ரூ.16 லட்சம் மோசடி - 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய ஆசாமி!