சமீப காலமாக தமிழ்நாட்டில், ரவுடிகள் தங்களது பிறந்தநாளைக் வித்தியாசமாக கொண்டாடி சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். குறிப்பாக பெரிய பட்டா கத்திகளில் பிறந்தநாள் கேக் வெட்டி, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே சென்னையில் பினு மற்றும் அவனது கூட்டாளிகள் இது போன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த ரவுடிகள் பட்டா கத்திகளில் கேக் வெட்டி, கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறு பிறந்தநாளைக் கொண்டாடி, சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களில், ஐந்து பேரைப் பிடித்த காவல் துறையினர், அவர்கள் ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இருவரைக் கைது செய்து, காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
கைதான இருவர் மீதும் சில வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.