ETV Bharat / state

கோவை விமானநிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த ரோபோ சேவை

கோயமுத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் இரு தானியங்கி ரோபோக்கள் பயன்பாட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்தில் ரோபோ சேவை
கோவை விமான நிலையத்தில் ரோபோ சேவை
author img

By

Published : Jun 9, 2022, 9:42 PM IST

கோயம்புத்தூர்: விமான நிலையத்திலிருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், இந்தியா முழுவதற்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த அதிநவீன ரோபோக்கள் மூலம் தேவையான தகவல்களைப் பயணிகள் பெறமுடியும். இந்த இரண்டு அதிநவீன ரோபோக்களை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், காவல் ஆணையர் பிரதிப்குமார் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் வைக்கப்பட இருக்கின்றது. தானாக நகரும் தன்மை கொண்ட இந்த ரோபோக்கள் மூலம் பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அளிக்கும்.

விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் செல்லும் வழிகளை இந்த ரோபோக்கள் பயணிகளுக்குத் தெரிவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் ரோபோ சேவை

மேலும் ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளில் சிரமம் ஓரளவு குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கழிவுநீர்த்தொட்டிகளில் மனிதர் இறங்காமல் சுத்தம் செய்வதற்கான சென்னை ஐஐடியின் ரோபோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.