ETV Bharat / state

பேரறிவாளன் விடுதலை குறித்த பாடல் இணையத்தில் வெளியீடு

கோவை: வெங்கடாபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் பேரறிவாளன் விடுதலை குறித்த பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை குறித்த பாடல் இணையத்தில் வெளியீடு
பேரறிவாளன் விடுதலை குறித்த பாடல் இணையத்தில் வெளியீடு
author img

By

Published : Nov 19, 2020, 8:03 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலைசெய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு கட்சியினர் போராடிவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று (நவ.19) வெங்கடாபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் #RELEASE PERARIVALAN என்று தமிழ் பாடல் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் இணையத்தின் வாயிலாக திரைத் துறையினர், பேரறிவாளனின் தாயார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பொழுது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேசியதாவது, "எனது மகன் பேரறிவாளனை இந்த முறையாவது விடுதலை செய்ய வேண்டும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தொடர்ந்து இணையத்தின் வாயிலாக கலந்துகொண்ட திரைத் துறையினர்கள் நடிகர் சத்தியராஜ், இயக்குநர் மிஷ்கின், அமிர், வெற்றிமாறன், நடிகர் விஜய்சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: உன் மகன், உன்னிடம் வருவான் என்றார் ஜெ., - இன்னும் அது நடக்கவில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.