ETV Bharat / state

செம்மண் திருட்டு: கோவையில் லாரிகளை சிறைப்பிடித்த சமூக செயற்பாட்டாளர்! - மருதமலையில் செம்மண் திருடிய லாரிகளை பிடித்த சமூக ஆர்வலர்

கோவை: மருதமலை பகுதியில் அனுமதியின்றி செம்மண் திருடிய லாரி, பொக்லைன் வாகனங்களை சமூக செயற்பாட்டாளர் சையது என்பவர் சிறைப்பிடித்தார்.

red sand theft lorry
author img

By

Published : Oct 5, 2019, 2:04 PM IST

கோவை மாவட்டம் தடாகம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் சூளைகளுக்கு அளவுக்கதிகமாக செம்மண் எடுக்கப்பட்டதால் அலுவலர்கள் மண் எடுப்பதை வரைமுறைப்படுத்த வேண்டும் என செங்கல் சூளை உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட அளவுக்கே செம்மண் எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

அளவுக்கதிகமாக மண் எடுக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால், தடாகம் பகுதியில் செம்மண் எடுப்பதைத் தவிர்த்த செங்கல் சூளை உரிமையாளர்கள் தொண்டாமுத்தூர் பகுதியில் செம்மண் எடுக்க முயற்சி செய்தனர். அங்கும் எதிர்ப்புக் கிளம்பியதால் மருதமலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியையொட்டி தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் செம்மண் எடுக்கத் தொடங்கினர்.

சம்பவத்தன்று, இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்த 'ஓசை சுற்றுச்சூழல்' அமைப்பைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சையது என்பவர் சட்டவிரோதமாக செம்மண் எடுத்துக்கொண்டிருந்த நான்கு லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்தார்.

இது குறித்து சையது கூறுகையில், "ஐ.ஓ.பி. காலனி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, செம்மண் லோடு செய்யப்பட்ட நான்கு லாரிகள் சாலையோர நீர்வழிப்பாதையில் நின்றுகொண்டிருந்தது.

அப்போது, லாரி ஓட்டுநர்களிடம் விசாரித்தபோது, வேறு பகுதியில் செம்மண் எடுக்க கனிமவளத் துறையிடம் அனுமதி பெற்றுவிட்டு மருதமலை அருகே சட்டவிரோதமாக மண் எடுத்துவருவது தெரியவந்துள்ளது.

லாரிகள் சிறைப்பிடிப்பு

இந்தச் செம்மண்ணை காளப்பாளையம் அருகில் உள்ள செங்கல் சூளைக்கு எடுத்துச் செல்ல இருப்பதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது" எனக் கூறியுள்ளார்.

முறையான அனுமதி பெறாமல் செம்மண் எடுத்த நான்கு லாரிகள், பொக்லைன் இயந்திரங்களைப் பறிமுதல் செய்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சையது வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மரங்களை உயிருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நட்டு பாதுகாப்பு - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு!

Intro:கோவையை அடுத்த மருதமலை பகுதியில் அனுமதியின்றி செம்மண் கொள்ளை. மண் அள்ளும் வாகனங்களை சிறைபிடித்த சமூக ஆர்வலர்..Body:கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளை கைகளுக்கு அளவுக்கு அதிகமாக செம்மண் எடுக்கப்பட்டதால் அதிகாரிகள் மண் எடுப்பது வரைமுறைப்படுத்த வேண்டும் என செங்கல் சூளை உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அரசு அனுமதி உள்ள பகுதிகளில் மட்டுமே குறிப்பிட்ட அளவுக்கு செம்மண் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர். மேலும் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து தடாகம் பகுதியில் செம்மண் எடுப்பதை தவிர்த்துவிட்டு தொண்டாமுத்தூர் பகுதியில் செம்மண் எடுக்க முயற்சி செய்தனர் அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது மருதமலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டி தனியாருக்கு சொந்தமான நிலங்களை செம்மண் எடுக்க துவங்கியுள்ளனர் இந்நிலையில் அங்கு செம்மண் எடுத்துக் கொண்டிருந்த 4 லாரிகள் மற்றும் பொக்லின் இயந்திரத்தை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த சையது என்பவர் சிறை பிடித்தார். இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் சயது கூறிகையில் ஐ.ஓ.பி. காலணி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த போது, செம்மண்ணை ஏற்றிக்கொண்டு 4 லாரிகளில் சாலை ஓரத்தில் நீர் வழிப்பாதையில் நின்றுகொண்டிருந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர்களிடம் விசாரித்த போது வேறு பகுதியில் செம்மண் எடுக்க கனிமவளத்துறையில் அனுமதி பெற்று மருதமலை அருகே சட்டவிரோதமாக மண் எடுத்தது தெரியவந்தது. மேலும் மருதமலை அருகே எடுக்கும் செம்மண்ணை காளப்பாளையம் அருகில் உள்ள செங்கல் சூளைக்கு எடுத்து செல்ல இருப்பதாக ஓட்டுநர்கள் தெரிவித்தார். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தேன், பின்னர் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் தகவல் அளித்தேன் அதன் பின் அங்கு வந்த அதிகாரிகள் விசாரித்த போது முறையான அனுமதி பெறாமல் செம்மண் எடுத்தது தெரியவந்தது. உடனடியாக பிடிப்பட்ட 4 லாரிகள் மற்றும் பொக்லின் இயந்திரங்களை பறிமுதல் செய்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.