ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை!

ஈடிவி பாரத் வெளியிட்ட சிறப்பு செய்தி எதிரொலியாக, கோவையில் சட்ட விரோதமாக செம்மண் எடுத்த செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை!
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை!
author img

By

Published : Aug 11, 2022, 12:05 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சின்ன தடாகம், சோமயம்பாளையம், நஞ்சுண்டாபுரம் மற்றும் பன்னிமடை ஆகிய நான்கு ஊராட்சிகளில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அரசு விதிமுறைகளை மீறி ஏராளமான செங்கல் சூலைகள் செயல்பட்டு வந்தன. அதேநேரம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அரசு மற்றும் கோயில் நிலங்களில் 50 முதல் 100 அடி ஆழம் வரையில் செங்கல் சூளைகளுக்கு செம்மண் வெட்டி எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக மேற்குதொடர்ச்சிமலையில் உள்ள யானை உள்ளிட்ட விலங்குகள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், செங்கல் சூளைகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் அப்பகுதி மக்கள் ஆஸ்துமா, கேன்சர் ஆகிய நோயினால் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு செம்மண் எடுக்கப்பட்டதன் பாதிப்பை கடந்த 2019 ஆம் ஆண்டு ஈடிவி பாரத் செய்தி, கழுகு பார்வையில் வீடியோவாக எடுத்து செய்தி வெளியிட்டது.

கழுகு பார்வையில் செங்கல் சூளைகள்

இதனைத்தொடர்ந்து செம்மண் எடுக்க சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பின்னர் இவர்கள் சட்ட ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கையினை தொடர்ந்து, இந்த நான்கு ஊராட்சிகளில் செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு தடை விதித்தது.

இதனால் செங்கல் சூளைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கனிம வளத்துறை அலுவலர்கள் செங்கல் சூளைகள் மற்றும் மண் எடுக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை!

அப்போது செங்கல் சூளைகளில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண் அளவினை கணக்கிட்டு, இந்த நான்கு ஊராட்சிகளிலும் 1.10 கோடி கன மீட்டர் மண் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். மேலும் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்ட நிலையில், செங்கல் சூளைகளுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் எடுத்த 117 செங்கல் சூளைகளுக்கு 2 கோடி முதல் 10 கோடி வரை அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சுற்றுச்சூழலைப் பாதிக்கும் செங்கல் சூளைகள்; குற்றஞ்சாட்டும் சமூக ஆர்வலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.