இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபட்ட பின் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி தங்களது அன்பை தெரிவித்துக் கொண்டனர். மேலும் இன்றைய தினம் ஏழைகளுக்கும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து இந்தப் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.
அரபு நாடுகளில் பிறை தெரிந்ததன் அடிப்படையில் இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை அடிப்படையாகக் கொண்டு ஹிஜ்ரி கமிட்டி, ஜாக் கமிட்டி சார்பில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் இருக்கும் பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் நாளைய தினம் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கின்றது.
பெரும்பான்மை இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதால் நாளைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.