கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் ஸ்ரீ சக்தி கல்லூரி மற்றும் செங்கோட கவுண்டர் கல்வி அறக்கட்டளை சார்பில் நான்காம் ஆண்டு வேளாண் திருவிழாவையொட்டி, 200, 300 மீட்டர் என இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
4 வயதிற்குட்பட்ட காளைகள் 20 மீட்டர் போட்டியிலும், 4 வயதிற்கு மேற்பட்ட காளைகள் 300 மீட்டர் போட்டியிலும் பங்கேற்றன. இந்தப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகழித்தனர்.
இதுகுறித்து பேசிய கல்லூரி பேராசிரியர் மணிகண்டன், 'விவசாயிகளையும், விவசாயிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளையும் நாம் மறக்கக் கூடாது. மனிதர்களுக்கு விளையாட்டு எவ்வளவு முக்கியமோ அதே போல் காளைகளுக்கும் இது போன்ற போட்டிகள் அவசியம். இயற்கை விவசாயம், வேளாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன' எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஈரோடு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு!