ETV Bharat / state

கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்! - கோவை எட்டிமடையில் நடைபெற்ற ரேக்லா பந்தயம்

கோவை: எட்டிமடை பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நவக்கரை ரேக்ளா கிளப் சார்பாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

விருவிருப்பாக நடைபெற்ற ரேக்லா பந்தயம்
விருவிருப்பாக நடைபெற்ற ரேக்லா பந்தயம்
author img

By

Published : Jan 19, 2020, 9:32 PM IST

ஆண்டுதோறும் கோவை மாவட்டம் எட்டிமடைப் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக இம்முறையும் ரேக்ளா பந்தயம் சிறப்பாக நடைபெற்றது.

இந்தாண்டு நடைபெற்ற போட்டியினை கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகம் தொடங்கிவைத்தார். இந்தப் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

இந்தப் போட்டியானது 300 மீட்டர், 200 மீட்டர் என்ற இரு பிரிவுகளில் நடைபெற்றது. இதில், வெற்றிபெற்ற காளைகள், சிறந்த காளைகள் என தேர்வுசெய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிகளில் காளைகள் சீறிப்பாய்ந்துவருவதால், பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: குமரியை குதூகலப்படுத்திய மாட்டுவண்டி பந்தயம்!

Intro:கோவை எட்டிமடையில் நடந்த ரேக்லா பந்தயம்

Body:கோவை எட்டிமடை பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நவக்கரை ரேக்ளா கிளப் சார்பாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

வருடம் தோறும் இந்த ரேக்ளா பந்தயம் ஆனது நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக இம்முறையும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது . இந்த போட்டியில் 400 க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. இந்த ஆண்டு போட்டியில் கோவை திருப்பூர் ஈரோடு பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டி 300 மீட்டர் மற்றும் 200 மீட்டர் என்ற இரு பிரிவுகளில் நடைபெறுகிறது இதில் வெற்றி பெற்ற காளைகள் சிறந்த காளைகள் என தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

போட்டிகளில் காளைகள் சீறிப் பாய்ந்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக குழுவினர் செய்திருந்தனர் மேலும் காவல்துறையை பாதுகாக்கும் பலமாக இருந்தது.

இந்த போட்டியினை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் துவக்கி வைத்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.