ETV Bharat / state

ரஜினிக்கு கொலை மிரட்டல் - பொங்கிய ரசிகர்கள்!

author img

By

Published : Jan 25, 2020, 4:04 PM IST

கோவை: ரஜினியின் மீது கொலை மிரட்டல் விடுத்த திராவிடர் கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர் மாவட்ட ஆணையரிடம் மனு அளித்தனர்.

pettition
pettition

துக்ளக் இதழின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். திராவிடர் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தது. ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், திராவிடர் கழகத்தினர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுவது போன்று பேசியதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல் விடும் அளவிற்கு திராவிடர் கழகத்தினர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆணையரிடம் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர் மனு அளித்தனர்.

ரஜினியின் மீது கொலை மிரட்டல் விடுத்த திராவிடர் கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் தெற்கு மண்டல செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, "துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதற்கு திராவிடர் கழகத்தினர் சார்பில் பல கண்டன போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவருக்கு கொலை மிரட்டல் விடுவதாக தெரிவித்திருந்தனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. அவர் துன்புறும் வகையில் திராவிடர் கழகத்தினர் பேசி இருக்கின்றனர். எனவே, பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற போராட்டங்களை நாங்களும் நடத்த தயாராக இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: ‘பழங்குடியினருக்குத் தெரியாமலேயே மனித நேய வார விழா’ - சமூக ஆர்வலர் கருத்து

Intro:ரஜினியின் மீது கொலை மிரட்டல் விடுத்த திராவிடர் கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரஜினி ரசிகர் மன்றத்தினர் மனு.Body:நடிகர் ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் திராவிடர் விடுதலை கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் மாவட்ட ஆணையரிடம் மனு அளித்தனர்.

துக்ளக் இதழில் ஐம்பதாம் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கருத்துக்களை தெரிவித்து இருந்தார் அத்ற்கு திராவிட கழகத்தினர் மற்றும் பல கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அவர் பேசுவதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல இடங்களில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினர். அவர்கள் நடத்திய போராட்டங்களில் திராவிடர் கழகத்தினர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுவது போன்று பேசியதாக கூறப்படுகிறது. எனவே கொலை மிரட்டல் விடும் அளவிற்கு திராவிட கழகத்தினர் பேசி இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆணையரிடம் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் தெற்கு மண்டல செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் இதழில் பேசியதற்கு பல கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்திய திராவிட கழகத்தினர் ரஜினிக்கு கொலைமிரட்டல் விடுவதாக தெரிவித்திருந்தனர் என்றும் இது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார் மேலும் ரஜினிகாந்த் அவர்களை மிகவும் துன்புறும் வகையில் திராவிட கழகத்தினர் பேசி இருப்பதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் மேலும் இதுபோன்ற போராட்டங்கள் மட்டும் ஆர்ப்பாட்டங்களை நாங்களும் நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் அறிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.