ETV Bharat / state

'மழைநீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பில் முழு கவனம் தேவை' - எஸ்.பி. வேலுமணி

author img

By

Published : Jan 22, 2020, 5:39 PM IST

Updated : Jan 22, 2020, 5:55 PM IST

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மழைநீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பில் முழு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

S.P. Velumani
S.P. Velumani

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், உள்ளாட்சித் துறைக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். தேர்தலின்போது மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தன்னிடம் தெரிவித்தால் நிறைவேற்றிவிடலாம் என உறுதியளித்தார்.

எஸ்.பி. வேலுமணி பேச்சு

மேலும் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டிய பொறுப்பு ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு உண்டு எனச் சொன்ன அவர், தான் பேரூராட்சித் தலைவராக இருந்தபோது மக்களை நேரடியாகச் சென்று பார்த்ததை நினைவுகூர்ந்து குறிப்பிட்ட வேலுமணி, நீங்களும் அதுபோல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இறுதியாக அவர், மழைநீர் சேகரிப்பில் முழு கவனம் செலுத்தினால் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியும் எனவும் மழைநீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த முகாமில் கோவை மாவட்டத்தில் வெற்றிபெற்ற 228 ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பொருளாதார வல்லுநர்களை விமர்சிக்கும் பாஜக அமைச்சர்கள் - சிதம்பரம் கருத்து!

Intro:மழைநீர் சேகரிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் எஸ் பி வேலுமணி அறிவுறுத்தல்..Body:கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.
பயிற்சி முகாமில் கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளின் தலைவர், துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த முகாமில்
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு ஊராட்சி
மன்ற தலைவர், துணைதலைவர்களுக்கு பயிற்சி ஏடுகளை வழங்கி பேசினார். அப்போது
ஊரக உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது எனவும்,பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயல்லிதா ஆலோசனையின் பேரில் அமல்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

ஊராட்சிகளில் சாலை மேம்பாடு, சுகாதாரம், பாலங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை தீர்த்து வைக்கும் பணிகளை ஊராட்சி தலைவர், துணைதலைவர்களால் சிறப்பாக செய்ய முடியும் என தெரிவித்தார்.
மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் பொறுப்பு ஊராட்சி தலைவர், துணைதலைவர்களுக்கு உண்டு என கூறிய அவர்,
பேரூராட்சி தலைவராக இருந்த போது நேரடியாக மக்களை சென்று பார்ப்பேன் எனவும், அதனால் துப்புரவு பணியாளர்கள் , ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள் என தனது அனுபவத்தை கூறிய எஸ்.பி.வேலுமணி,
நீங்களும் இது போன்று மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

உள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், தேர்தலின் போது நிறைய வாக்குறுதிகள் மக்களுக்கு கொடுத்து இருப்பீர்கள், அதை என்னிடம் சொல்லுங்கள் நிறைவேற்றிவிடலாம் எனவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும்
50 லட்சம் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது என கூறிய அவர்,
கங்கையை சுத்தம்
செய்ய தமிழக அதிகாரிகளிடம்தான் பயிற்சி பெற்று செல்கின்றனர் அந்தளவு திறமையான அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.மழைநீர் சேகரிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்திய அவர்,
குடிநீர் பிரச்சினை அதிகமாக வரும் எனவும்,
மழைநீர் சேகரிப்பில் கவனம் செலுத்தினால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.பிளாஸ்டிக் ஒழுப்பில் ஊராட்சி தலைவர், துணைதலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய அவர் நிதி ஆதாரத்தை உயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.Conclusion:
Last Updated : Jan 22, 2020, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.