கோயம்புத்தூர்: கோவையில் வடக்கிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொலைப்பேசி எண்கள் வழங்கப்படுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் செய்திக்குறிப்பில், ”வடகிழக்கு பருவமழை மழையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள்,
அலுவலகத்தின் பெயர் | கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் |
---|---|
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | 0422-1077, 0422-2301114 |
மாநகராட்சி பிரதான அலுவலகம் | 0422-2302323, 8190000200(whatsapp) |
மாநகராட்சி வடக்கு | 0422-2243133 |
மாநகராட்சி தெற்கு | 0422-2252482 |
மாநகராட்சி கிழக்கு | 0422-2577056, 2572696 |
மாநகராட்சி மேற்கு | 0422-2551700 |
மாநகராட்சி மையம் | 0422-2215618 |
வால்பாறை நகராட்சி | 04253-222394 |
பொள்ளாச்சி நகராட்சி | 04259-220999 |
மேட்டுப்பாளையம் நகராட்சி | 04254-222151 |
கூடலூர் நகராட்சி | 0422-2692402 |
கருமத்தம்ப்பட்டி நகராட்சி | 0421-2333070 |
காரமடை நகராட்சி | 04254-272315 |
மதுக்கரை நகராட்சி | 0422-2511815 |
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் | 04254- 222153 |
அன்னூர் வட்டாட்சியர் | 04254- 299908 |
கோவை வடக்கு வட்டாட்சியர் | 0422-2247831 |
கோவை தெற்கு வட்டாட்சியர் | 0422-2214225 |
சூலூர் வட்டாட்சியர் | 0422-2681000 |
பேரூர் வட்டாட்சியர் | 0422- 2606030 |
மதுக்கரை வட்டாட்சியர் | 0422-2622338 |
கிணத்துக்கடவு வட்டாட்சியர் | 04259-241000 |
பொள்ளாச்சி வட்டாட்சியர் | 04259-226625 |
ஆனைமலை வட்டாட்சியர் | 04253- 296100 |
வால்பாறை வட்டாட்சியர் | 04253- 222305 |
பொதுமக்கள், வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், அது தொடர்பான புகைப்படங்களை 8190000200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) என்ற வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியின் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. முழு விவரம்