கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கோவை ரயில் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் இன்ஃப்ராரெட் தெர்மல் மீட்டர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு பயணிகளுக்கு கை கழுவும் கிருமி நாசினிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து ரயில்வே டி.எஸ்.பி. அண்ணாதுரை பேசியதாவது;
"தமிழ்நாடு ரயில்வே துறை இயக்குநர் சைலேந்திரபாபு, தமிழ்நாடு ரயில்வே துறை தலைவர் வனிதா ஆகியோரின் உத்தரவின் பேரில், மார்ச் 17ஆம் தேதி (நேற்று) முதல் மூன்று நாட்களுக்கு வெளியூரில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கரோனா அறிகுறியுடன் யாரேனும் இருந்தால் அவர்கள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் ரயில்வே காவல் துறையின் சார்பாக ஆம்புலன்ஸ் வசதி, ஸ்டெக்சர் வசதி உள்ளது. ரயில்வே பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், ரயில்வே காவலர்களுக்கு மாஸ்க் வழங்கப்பட்டு அவர்களின் உடைமைகள் நாள்தோறும் மாற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது", என்றார்.
இதையும் படிங்க: காய்ச்சல் உள்ளவர்கள் உணவைக் கையாள அனுமதியில்லை - ரயில்வே