கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கூட்டுறவு வங்கி அருகில் இன்று காலை 7 மணி அளவில் சிறுத்தை இருப்பதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அப்பகுதியை ஆய்வு செய்துவருகின்றனர்.
மேலும், இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "நகர் பகுதிகளில் சிறுத்தைக்கு தேவையான இறை, வெகு இலகுவாக கிடைத்துவிடம் என்பதினாலே, சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாகவும், இதுவரை வால்பாறை பகுதியில் ஆடு, மாடு, பன்றி ஆகியவற்றை வேட்டையாடியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
முன்னதாக, நேற்று (மே 22) காமராஜர் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்பவருடைய வளர்ப்பு நாயை, சிறுத்தை வீட்டிற்கே வந்து வேட்டையாட முயற்சித்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சிறுத்தையை விரட்டியடுத்து நாயை காப்பாற்றியுள்ளனர். மேலும், தொடர்ந்து இதுபோல் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துகள் ஏலம்