கோயம்புத்தூர்: மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உழவர் போராடிவந்தனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக (Govt to Repeal Farm laws) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நேற்று (நவம்பர் 19) காலை அறிவித்தார்.
நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பை உழவர் கொண்டாடிவருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் (President of the Tamil Nadu Farmers Association) சு. பழனிசாமி கூறியதாவது, “வேளாண் சட்டத்தைத் (Farm Laws) திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகரில் நடைபெறும் போராட்டமானது 359 நாள் நிறைவுற்ற நிலையில், திடீரென வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக (Govt to Repeal Farm laws) பிரதமர் அறிவித்திருக்கிறார்.
இந்தப் போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் பல்வேறு நிகழ்வுகளைக் கடந்துவந்திருக்கிறோம். இன்றும்கூட பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்துவருகிறோம். இந்நிலையில் தற்போது வேளாண் சட்டங்களைத் (Farm Laws) திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது காலம் கடந்த அறிவிப்பாகவே கருதுகிறோம்.
இந்த அறிவிப்பை தற்காலிக வெற்றியாகவே பார்க்கிறோம். மேலும் உழவர், சட்ட வல்லுநர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரைச் சேர்த்துதான் இனிமேல் சட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்திருக்கிறார். இதனை உழவருக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம்.
உழவர் போராட்டங்களை அரசு பரிசீலிக்கவில்லை என்றால் எவ்வளவு பெரிய போராட்டமும் தொடரும் என்பதற்கு இது ஒரு சாட்சி. இதனைத் திரும்பப் பெற மக்களவை கூட்டப்பட வேண்டும் என்ற அறிவிப்பைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Govt to Repeal Farm laws: 'உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!'