பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மகேந்திரன், திமுக சார்பில் சண்முக சுந்தரம், அமமுக சார்பில் முத்துக்குமார், மநீம சார்பில் மூகாம்பிகை, நாம் தமிழர் கட்சி சார்பில் சனுஜா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், முன்னணியில் இருந்து வந்தார்.
சண்முக சுந்தரம் நான்கு லட்சத்து 89 ஆயிரத்து 274 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன் மூன்று லட்சத்து 40 ஆயிரத்து 194 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
ஒரு லட்சத்து 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சண்முக சுந்தரம் வெற்றிபெற்றுள்ளார். வெற்றிபெற்ற சண்முகசுந்தரம், திமுக உறுப்பினராக 1990 முதல் இருந்து வருகிறார். கட்சியில் படிப்படியாக உயர்ந்து, திமுகவின் பொறியாளர் அணி மாநில துணைச்செயலாளரானார்.
தற்போது பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் எம்பி. ஆக வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில், திமுகவைச் சேர்ந்த சண்முக சுந்தரத்தின் வெற்றி பெரிய கவனத்தை பெற்றுள்ளது.