ETV Bharat / state

நாட்டை நேசிப்பவர்கள் நேர்மையாக இருந்தால் நாடு முன்னேறும் -சகாயம் ஐஏஎஸ் - Kovai

கோவை: நாட்டை நேசிப்பவர்கள் நேர்மையாக இருந்தால் நாடு முன்னேறும் என சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார்.

சகாயம்
author img

By

Published : Jun 22, 2019, 8:28 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் பகுதியில் உள்ள அறிவு திருக்கோயிலில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில், இந்திய ஆட்சி பணி அதிகாரியும், தமிழ்நாடு அறிவியல் நகரம் துணைத் தலைவருமான சகாயம் ஐஏஎஸ் கலந்து கொண்டு யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடையே பேசினார். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சகாயம் ஐஏஎஸ், ‘கிராமப்புற விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிராமப் புறத்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளில் சிறப்பான கண்டுபிடிப்புகளுக்குத் தலா ஒரு லட்சம் வரை பரிசுத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

சகாயம் ஐஏஎஸ்

கிரானைட் குவாரி ஊழல் குறித்து விசாரணை மேற்கொண்டபோது மூன்று மிரட்டல் கடிதம் வந்ததாகவும், அதில் உடலை துண்டு துண்டாக வெட்டி கிரைனைட் குவாரியில் வீசுவதாக மிரட்டல் வந்ததாகவும், அதை பெரிய அளவில் அதட்டிக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

சகாயம் ஐஏஎஸ்

மேலும், இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகள் நேர்மை என்கிற பயணத்தை நோக்கிச் சென்றால் இதுபோன்ற மிரட்டலை கடந்து செல்வது வழக்கமான ஒன்றுதான். ஒரு நாட்டை நேசிப்பவர்கள், குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் நாடு முன்னேறும். காந்தி, நேதாஜி, பகத்சிங் போன்ற தலைவர்கள் மகத்தான தியாகம் செய்ததன் காரணமாக சுதந்திர தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுதந்திரத்திற்கான பலன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் நேர்மையாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் கிராமப்புற விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒரு லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம் பொள்ளாச்சியில் தகவல் 

பொள்ளாச்சி -ஜூன் 21 

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் பகுதியில் உள்ள அறிவு திருக்கோவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி இன்று நடைபெற்றது, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனம் செய்தனர், இந்த யோசன தின நிகழ்ச்சியில் இந்திய ஆட்சி பணி அதிகாரியும், தமிழ்நாடு அறிவியல் நகரம் துணைத் தலைவருமான சகாயம் கலந்து கொண்டு யோகா  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  மாணவர்களிடையே பேசினார்,இதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய சகாயம், சிறிய நிதியோடு செயல்படும் அறிவியல் நகரத்தில் கிராமப்புற விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும்,இதில் கிராமப் புறத்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் புதிய கண்டுபிடிப்புகளை சிறப்பாக இருக்கும் கண்டுபிடிப்புக்கு  தலா ஒரு லட்சம் வரை பரிசு தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை மாறுதல் செய்வதே மிரட்டல் என்றும், கிரானைட் விசாரணை மேற்கொண்டபோது மூன்று மிரட்டல் கடிதம் வந்ததாகவும், அதில் உடலை துண்டு துண்டாக வெட்டி கிரைனைட் குவாரியில் வீசுவதாகவும் மிரட்டல் வந்ததாகவும், இதை பெரிய அளவில் அதட்டிக் கொள்ளவில்லை என்றும்,இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகள் நேர்மை என்கிற பயணத்தை நோக்கி சென்றால் இதுபோன்ற மிரட்டலை கடந்து செல்வது வழக்கமான ஒன்றுதான் என்றும், ஒரு நாட்டை நேசிப்பவர்கள் குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் நாடு முன்னேறும், காந்தி, நேதாஜி, பகத்சிங் போன்ற தலைவர்கள் மகத்தான தியாகம் செய்த காரணமாக சுதந்திர தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், சுதந்திரத்திற்கான பலனை எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் ஆட்சியாளர்களும் அரசு அலுவலர்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் சகாயம் பேட்டியின்போது தெரிவித்தார்.
பேட்டி - சகாயம், அறிவியல் நகரம், துணைத் தலைவர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.