பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மகேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். பொள்ளாச்சி பகுதிக்கு இன்று வந்த மகேந்திரனை கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் காந்தி சிலை முன்பு கூடி வரவேற்றனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படத்திற்கு வேட்பாளர் மகேந்திரன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்னர் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வேட்பாளர் மகேந்திரனா அறிமுகப்படுத்திவாக்கு சேகரித்தார்.
அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, "வேட்பாளர்மகேந்திரன் சென்றமுறை எம்பியாக இருந்தபோது, ரூ.5000 கோடி அளவிற்கான திட்டங்களை பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் செயல்படுத்தி இருக்கிறார். அந்தத் திட்டங்களை மக்களிடையே புகுத்தி இந்தத் தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில்மகேந்திரனை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
மேலும், 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில்மகேந்திரனை வெற்றி பெறச் செய்வோம் எனதொண்டர்கள் மத்தியில் கூறி அவர்களுடன் சபதமும்ஏற்றுக்கொண்டார்.