கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு, கரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, "சினிமா மூலம் ஈர்க்கப்பட்டவர் கமல்ஹாசன். அதனால் அவரை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் செல்கின்றனர். மற்றபடி அரசியலில் நடிகர் கமல்ஹாசன் வெறும் பூஜ்யம் மட்டுமே.
திமுகவினரை பொறுத்தவரை அதிமுக மீது குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அதிமுகவிற்கு நேற்றும் இன்றும் என்றும் மக்கள் செல்வாக்கு உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டம் - ஜெயக்குமார்