ETV Bharat / state

புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளாக மாறிய மாணவர்கள்

கோவை: சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டம் நடத்திய போட்டிகளில் பல மாணவர்கள் புலி போன்று முகத்தில் சாயமிட்டு பங்கேற்றனர்.

பொள்ளாச்சி வனத்துறைக் கோட்டம்  கோவை மாவட்டச் செய்திகள்  பன்னாட்டு புலிகள் தினம்  international tigers day  tiger day function  pollachi forest department  tiger day competition
புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளாக மாறிய மாணவர்கள்
author img

By

Published : Jul 31, 2020, 5:48 PM IST

சர்வதேச புலிகள் தினம் ஜுலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. காடுகளின் வளங்களை மேம்படுத்தும் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடைபெற்ற போட்டியில், பொள்ளாச்சி, டாப்சிலிப் பகுதிகளில் இருந்து 295 பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

புலிகளாக மாறிய பள்ளி மாணவர்கள்

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கைவினைப் பொருள்கள் செய்தல், முகச்சாயம் பூசுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பழங்குடியின மாணவ மாணவிகள் சிறப்பாக பங்களிப்பு செய்திருந்தனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும், போட்டியில் வெற்றிபெற்ற 80 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இவை அருகிலுள்ள வனச்சரகத்தின் மூலமாகவும், தபால் மூலமாகவும் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பங்கேற்ற அனைத்து மாணவர்கள், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பாகம் பொள்ளாச்சி கோட்டத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் ஆப்சென்ட்: ஆட்டம் காணும் கோவை தொழிற்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.