ETV Bharat / state

பொள்ளாச்சியில் போலி மருத்துவர் கைது! - ஆயுர்வேதிக் மருத்துவர் கைது

கோவை: பொள்ளாச்சியில் கருவை கலைக்க ஊசி போட்டதில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த போலி ஆயுர்வேத மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் போலி மருத்துவர் கைது!
author img

By

Published : May 2, 2019, 9:26 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி வனிதாமணி ஆறாவது முறையாக கர்ப்பம் தரித்தார். ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைத்து கர்ப்பத்தை கலைக்க வடசித்தூர் கிராமத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவரிடம் சென்றுள்ளார், அங்கு போலி ஆயுர்வேத மருத்துவரான முத்துலட்சுமி கர்ப்பத்தை கலைக்க ஊசி போட்டதை அடுத்து வனிதாமணி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து முத்துலட்சுமி போலி மருத்துவர் என்பது தெரியவந்ததை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை அறிந்துகொண்ட முத்துலட்சுமியும் அவரது மகன் கார்த்திக்கும் தலைமறைவாகிவிட்டனர்.

வழக்குப்பதிவு செய்திருந்த நெகமம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவான போலி மருத்துவர் முத்துலட்சுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் நாகப்பட்டினத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் முத்துலட்சுமியை கைது செய்து, பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இன்னும் பிடிபடாமல் தலைமறைவாக உள்ள முத்துலட்சுமியின் மகன் கார்த்திக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் கருவை கலைக்க ஊசி போட்டதில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த போலி ஆயுர்வேதிக் மருத்துவர் முத்துலட்சுமி கைது. 

பொள்ளாச்சி -மே-1 பொள்ளாச்சி அடுத்த மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி வனிதாமணி ஆறாவது முறையாக கர்ப்பம் ஆனதை அடுத்து அவரது கருவை கலைக்க வடசித்தூர் கிராமத்தில் உள்ள ஆயுர்வேதிக் மருத்துவர் முத்துலட்சுமி ஊசி போட்டுள்ளார், இதில் வனிதாமணி உயிரிழந்தார், இதைத் தொடர்ந்து முத்துலட்சுமியின் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்,ஆனால் ஊசி போட்ட போலி மருத்துவர் முத்துலட்சுமி அவரது மகன் கார்த்திக் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர், இந்நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள நெகமம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவான போலி மருத்துவர் முத்துலட்சுமி தேடி வந்தனர்,அவர் நாகப்பட்டினத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர்  பதுங்கியிருந்த முத்துலட்சுமி கைது செய்து பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தனர். தலைமறைவாக உள்ள முத்துலட்சுமியின் மகன் கார்த்திக் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர், கைது செய்யப்பட்டுள்ள போலி மருத்துவர் முத்துலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.