கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின் பேரில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் அறிவுறுத்தலின்படி மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று அறிவுறுத்திய அதிகாரிகள், கை கழுவும் முறைகள் போன்றவற்றை எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து செந்தில் என்பவர் கூறுகையில், "பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தபோது பிரதமரின் அறிவுரையை ஏற்று கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும், ராம பட்டணம் ஊராட்சியில் சாக்கடைகள் தூர் வாராமல் இருப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே விரைவில் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சாலையோர மக்களுக்கு முகக் கவசம் வழங்கிய வருவாய் அலுவலர்கள்