ETV Bharat / state

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞரை தாக்கிய காவலர்கள்: மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

author img

By

Published : Sep 14, 2020, 11:34 PM IST

கோயம்புத்தூர்: பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்று, லத்தியால் அடித்த விவகாரம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Police assault a youth who was taken away for questioning: State Human Rights Commission notice!
மனித உரிமைகள் ஆணையம்

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(28). இவரை, செப்டம்பர் 11ஆம் தேதியன்று கொலை வழக்கில் தொடர்புடையவர் எனக் கூற பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, அவரை விசாரணை செய்த காவல் துறையினர், லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், கண்ணனுக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு நடப்பதற்கே பெரும் சிரமபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, தன்னை தாக்கிய காவல் துறையினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி செப்டம்பர் 12ஆம் தேதியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.

இதனைக் கண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், மூன்று வார காலத்திற்குள் அந்த காவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.