ETV Bharat / state

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்; ஆசிரியர் அதிரடி கைது! - private school

அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில், ஆசிரியரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

pocso arrest
arrest
author img

By

Published : Jul 29, 2022, 9:28 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவ மாணவிகளிடம் அங்கு பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் ஆபாசமாகப்பேசி, பாலியல் சீண்டல் செய்ததாகத் தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

புகாரை கேட்ட தலைமை ஆசிரியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு, வெளியே கூற வேண்டாம் என தெரிவித்தாகத்தெரிகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவிகள் உடற்கல்வி ஆசிரியர் குறித்து தங்கள் வீட்டில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இன்று பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர், சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும், இது குறித்து பெற்றோர்களுக்குத் தகவல் அளிக்காதது ஏன் எனக்கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அங்கு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் அதிகளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் பெற்றோர்களை சமாதானப்படுத்தினர்.

இருப்பினும் தொடர்ந்து பெற்றோர்கள் கோசம் எழுப்பிய நிலையில் அங்கு கோவை மாநகர உதவி ஆணையாளர் சிலம்பரசன் தலைமையில் கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

மேலும் 5 மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் அவதூறாகப்பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப்புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ, மற்றும் வட்டாட்சியர் இந்துமதி, உள்ளிட்டோர் வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளிடம் அவதூறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரனுக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட உடற்கல்வி ஆசிரியர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவான ஆசிரியரை சரவணம்பட்டியில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த 5 நாட்களுக்கு முன் வேறு அரசு பள்ளியில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு புதிய இடம் வந்த உடற்கல்வி ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் போராட்டத்தை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஹைதராபாத் கூட்டுப்பாலியல் வன்புணர்வு வழக்கு: 350 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.