கோவை : வால்பாறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த கேரளா தலச்சேரியை சேர்ந்த மன்சூருக்கு (38) மனிஷா என்ற மனைவியும் ஒரு பெண் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், குவைத் நாட்டில் பணி புரிந்துகொண்டிருந்த மன்சூர் கேரளாவிற்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில், சுற்றுலா பயணமாக குடும்பத்துடன் வால்பாறைக்கு வந்துள்ளார்.
அப்போது, சுங்கம் பகுதியில் குளிக்கச்சென்றபோது ஆழமான பகுதிக்குச்சென்றுள்ளார். அப்போது மனைவி, குழந்தைகள், மனைவியின் அக்காள், அவரது கணவர் ஆகியோர் கண் முன்னேயே நீரில் மூழ்கியுள்ளனர். குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சிசெய்தும் மன்சூரைக் காப்பாற்ற முடியவில்லை.
மன்சூர் நீரில் முழ்கியதை அறிந்த அப்பகுதிக்கு வந்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் நீரில் முழ்கிய மன்சூரை உள்ளூர் மக்கள் உதவியுடன் மரணித்த நிலையில் மீட்டனர். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதையும் படிங்க : ஆளுநரின் சனாதான பேச்சுக்கு திமுக கடும் கண்டனம்!