நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையில் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள போத்தனூர் சாய் நகர் பகுதியில் வெண் நுரை கிளம்பியது. இந்த நுரையானது குடியிருப்பு பகுதிக்கு சென்றதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் இந்த நுரையில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள இந்த படலம் கழிவு பலம் என்று அப்பகுதி மக்கள் அச்சம் கொள்கின்றனர். இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்று ஆற்றில் கழிவுநீர் நுரைகள் வருவதாகவும், இதற்கு அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.