தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் பழனி முருகன் கோயிலும் மிகப்பிரபலமானது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள்.
குறிப்பாக, தைப்பூச விழாவின் போது பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால், அவர்களின் வசதிக்காக கோவையில் இருந்து பழனி வரை சிறப்பு ரயில் இயக்கவேண்டி சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் இரண்டு முறை கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை கோவையில் இருந்து பழனிக்கு 10 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ரயில் காலை 9.45 மணிக்கு கோவையில் இருந்து பழனிக்கு கிளம்பும். பொள்ளாச்சிக்கு 10.55 மணிக்குச் சென்றடையும். நண்பகல் 12.45 மணிக்கு பழனியை அடையும். பழனியில் இருந்து கோவைக்கு நண்பகல் 1.45 மணிக்கு மீண்டும் கிளம்பும்.
இதையும் படிங்க: 90 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ரயில்வே பட்ஜெட்!