கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பாலமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. கூலித் தொழிலாளியான இவர் நேற்று இரவு அருகிலுள்ள குஞ்சூர் பகுதியில் உள்ள தனது அம்மா மாரியம்மாள் வீட்டுக்குச் சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வனப்பகுதி வழியாக பெருக்குபதி வரும்போது, அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானை அவரை தாக்கியது. இதில் முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து யானையின் பிளிரல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள், அங்கு சென்று பார்த்தபோது சின்னசாமியின் அருகில் யானை ஆக்ரோசமாக நின்றுகொண்டிருந்தது. பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் யானையை விரட்டினர்.
பின்னர் வனத்துறைக்கும், காவல் துறைக்கும் தலவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு சின்னசாமியின் உடலை உடற்கூறாய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பிவைத்தனர். யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெற்றோர் மீது கோபம்... கிணற்றில் குதித்த மகள்; காப்பாற்ற விழுந்த அண்ணன் - பறிபோன இரு உயிர்கள்!