ETV Bharat / state

கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் திடீர் சோதனை - National Security Agency raid

கோவை: உக்கடம், வின்சென்ட் சாலை உள்ளிட்ட 4 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

nia-searching
author img

By

Published : Aug 29, 2019, 8:48 AM IST

பாதுகாப்பு அச்சுறுத்தல், பயங்கரவாதிகள் ஊடுறுவல், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி தேசிய பாதுகாப்பு முகமை (NIA) அலுவலர்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, நாகை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை குறிவைத்து அவ்வப்போது சோதனை நடக்கிறது.

இந்நிலையில் இன்று காலை 5 மணி முதல் கோவை உக்கடம், வின்சென்ட் சாலை, ஜிஎம் நகர், பிலால் எஸ்டேட் உள்ளிட்டப் பகுதிகளில் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் தேசிய பாதுகாப்பு முகமையினர் திடீர் சோதனை

மாநகர காவல்துறை உதவியுடன் ஜிஎம் நகரை சேர்ந்த உமர் பரூக், வின்சென்ட் சாலை சனோபர் அலி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள சமீஷா முபீன், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த முகமது யாசிர், ஜிஎம் நகர் பகுதியில் உள்ள சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வந்தது.
தற்போது தேசிய பாதுகாப்பு முகமையினர் கோவையில் முகாமிட்டுள்ளனர்.

Intro:கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஐந்து இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்Body:கோவையில் அண்மைக்காலமாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர் இதில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்று காலை 5 மணி முதல் கோவை, உக்கடம் வின்சென்ட் சாலை ஜி எம் நகர் பிலால் எஸ்டேட் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஜந்து குழுக்களாக பிரிந்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகர காவல்துறை உதவியுடன் ஜிஎம் நகர் பகுதியில் உமர் பரூக் என்பவர் வீட்டிலும் வின்சென்ட் சாலையில் சனோபர் அலி வீட்டிலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள சமீஷா முபீன் மற்றும் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள முகமது யாசிர் ஜிஎம் நகர் பகுதியில் உள்ள சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது..
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் ஐந்து பேரின் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.