கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ’உயிர்’ என்ற தனியார் அமைப்பும், மாநகர காவல் துறையும் இணைந்து போக்குவரத்து காவலர்களுக்கு சட்டையில் பொருத்திக் கொள்ளும் வகையிலான கேமராக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் 70 கேமராக்களை போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போக்குவரத்து காவலர்களுக்கு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இந்த கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சட்டையில் பொருத்தக்கூடிய 70 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கண்காணிப்பு பணியை மேம்படுத்தும் வாக்குவாதங்களை தவிர்க்க முடியும். கண்காணிப்பு அறையில் இருந்தவாறே நேரடியாக நடக்கும் சம்பவங்களை பார்த்து நடவடிக்கை எடுக்க முடியும். அறிமுகப்படுத்தப்பட்ட ”police e eye app”ஐ இதுவரை 16 ஆயிரம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். இதன்மூலம் 71 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் 14,100 வழக்குகள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.