ETV Bharat / state

அங்கொடா லொக்கா மரண வழக்கில் புதிய தகவல்!

கோயம்புத்தூர்: இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கில் கைதுசெய்யப்பட்ட சிவகாம சுந்தரியின் ஓட்டுநர், அவரது நண்பர்களிடம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

angoda lokka
angoda lokka
author img

By

Published : Aug 10, 2020, 7:00 PM IST

இலங்கை தாதா அங்கொடா லொக்காவின் உடல் மர்மமான முறையில், மதுரையில் எரிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன், லொக்காவின் காதலி அமானி தான்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் விசாரணையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கின. தற்போது இவ்வழக்கு தொடர்பாக சிவகாம சுந்தரியிடம் சிபிசிஐடியினர் விசாரணை நடத்திவருகின்றனர். மதுரை ரயிலார் நகர் பகுதியில் உள்ள சிவகாம சுந்தரியின் வீட்டில் சிபிசிஐடி அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவரோடு தொடர்பிலுள்ள பிற நபர்களிடமும், அண்டை வீட்டாரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

சிவகாம சுந்தரியின் வாகன ஓட்டுநர், அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சிவகாம சுந்தரியின் வங்கிக் கணக்குகள் பரிமாற்றம் தொடர்பாக அவர் கணக்கு வைத்துள்ள வங்கிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் ரூ.33 கோடி மதிப்பில் நலத்திட்டம் வழங்கிய முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.