ETV Bharat / state

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி

author img

By

Published : Mar 1, 2020, 7:52 AM IST

கோவை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி
பள்ளி குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி

இந்தியா முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதைக் கொண்டாடும்விதமாக கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள இளங்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்துஸ்தான் ஸ்கவுட் அண்ட் கைட்ஸ் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீனிவாச சர்மா (82) கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

nathional-science-day
பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி

இந்த நிகழ்வில் பல்வேறு பள்ளிக் குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரும் வகையிலும் விஞ்ஞான ரீதியில் செய்த கண்டுபிடிப்புகளைக் கண்காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கோவையில் கொண்டாடிய தேசிய அறிவியல் தினம்

நிகழ்ச்சியில் பேசிய கௌரவ விருந்தினர் ஸ்ரீனிவாச சர்மா, "குழந்தைகளுக்கு கல்வி மட்டும் போதாது விஞ்ஞான அறிவும், சுயசிந்தனையும் இருக்க வேண்டும். அதை நிரூபிக்கும்வகையில் பல்வேறு குழந்தைகள் தங்களின் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவந்துள்ளது. சிந்தனைகளை வெளிக்கொணரும் எதிர்கால விஞ்ஞானிகளை காண்பதுபோல் ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்தார். மேலும், குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் இந்த அறிவியல் சிந்தனை எப்பொழுதும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: பணத்திற்காகக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.