கோவை பாரதிநகரில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சந்திரயான் 2 தனது நீள்வட்ட பாதையில் சுற்ற தொடங்கியுள்ளது. இது வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாக இறங்கும். அப்படி இறங்கும்போது தான் முழுமையான வெற்றி பதிவாகும். முதன்முதலாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 2 இறங்குவது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.
சர்வதேச அளவில் அனைவரும் உற்று நோக்க வேண்டிய நேரத்தில், சந்திரயான் 2 தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. இது அடுத்தக் கட்டம் நோக்கிய ஆராய்ச்சிக்கு உதவும். சர்வதேச அளவில் வர்த்தக ரீதியில் இந்தியாவை நோக்கி அனைத்து நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்திய விண்வெளி துறையில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது, என்றார்.