ETV Bharat / state

“மாட்டிறைச்சி சாப்பிடுவாயா?” - இஸ்லாமிய பள்ளி மாணவியை ஆசிரியர் துன்புறுத்தியதாக புகார்!

Muslim School Girl Complaint against Teacher: கோவையில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, மாட்டிறைச்சி சாப்பிடுவாயா எனக் கேட்டு சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரின் சூவை துடைக்க வைத்ததாகக் கூறி, மாணவி பெற்றோருடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
கோயம்புத்தூர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 8:16 AM IST

கோயம்புத்தூர்: கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி, நேற்று (நவ.21) கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் தனது பெற்றோருடன் வந்து, மாணவி பயிலும் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மீதும், பள்ளித் தலைமை ஆசிரியர் மீதும் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், வகுப்பு ஆசிரியர் மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இதைத் தொடர்ந்து மாணவி பெற்றோருடன் வந்து ஆசிரியர் குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம், தலைமை ஆசிரியரிடம் முறையிட்டது குறித்து ஆசிரியர் மாணவியிடம் வகுப்பறையில் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்பொழுது ‘உனது பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர்?’ என்ற கேள்விக்கு, மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக மாணவி தெரிவித்துள்ளார். அதற்கு அந்த ஆசிரியர் ‘மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் ஆடுறியாடி..’ என்று மாணவியைப் பார்த்து சொன்னதாகவும், அதற்கு அந்த மாணவி எனது பெற்றோரைப் பற்றியும், அவரது தொழிலைப் பற்றியும் ஏன் பேசுகிறீர்கள் என்று பதிலுக்கு பேசியதாகக் கூறுகின்றனர்.

இதில் ஆத்திரமடைந்த ஆசிரியை, மாணவியை கண்ணத்தில் அடித்ததாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோருடன் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட பொழுது, அவரும் மிரட்டுகின்றீர்களா என்று கூறியதாகவும், மாட்டுக்கறி சாப்பிடுவியா என்று சகமாணவிகள் மத்தியில் வைத்து கேட்டு, தனது ஷூவை துடைக்க வைத்தும் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆகையால், தனது படிப்புக்கு இவர்களால் பாதிப்பு இருக்கும் என்ற அச்சமாக இருப்பதாகக் கூறி, மாணவி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததாகவும், காவல்துறையினர் விசாரித்து உரிய அறிவுரை வழங்கியதுடன், பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்திய நிலையில், திரும்பவும் மாணவியை மிரட்டும் சம்பவம் நடைபெற்றதால் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே பெற்றோருடன் வந்து 7ம் வகுப்பு பள்ளி மாணவி புகார் அளித்த நிலையில், இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்க வேண்டிய ரூ.50 லட்சம் கடன் மோசடி..? வங்கியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.