ETV Bharat / state

உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்து 'தமுமுக' ரயில் மறியல் போராட்டம்

உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்து, கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரபிரதேச அரசை கண்டித்து தமுமுக ரயில் மறியல் போராட்டம்

author img

By

Published : Jun 14, 2022, 7:35 PM IST

கோயம்புத்தூர்: பாஜக நிர்வாகி நூபுர் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் பாஜக அரசைக் கண்டித்தும், நூபுர் சர்மாவைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது எதிர் தாக்குதல், கைது நடவடிக்கைகள் நடைபெற்றது. சில இடங்களில் புல்டோசர் வாகனங்கள் வைத்து இஸ்லாமியர்களின் வீடுகள் மட்டும் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்வைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமுமுக மாவட்டத் தலைவர் சர்புதீன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையத்திற்கு கண்டன முழக்கங்களை எழுப்பியபடி வந்த நிலையில் காவல் துறையினர் ரயில் நிலைய நுழைவுவாயில் முன்பே தடுத்து நிறுத்தியதால், காவல் துறையினருக்கும் தமுமுக-வினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

உத்தரபிரதேச அரசை கண்டித்து தமுமுக ரயில் மறியல் போராட்டம்

தொடர்ந்து பின்னால் வந்த தமுமுக-வின் மற்றொரு குழுவினர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் காவல் துறையினர் அவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: "தமிழ்நாடு அரசின் கடிதம் சட்ட விரோதமானது" - கர்நாடக முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.