கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் பாலம், பூங்கா பகுதியில் இடது கையில் அடிபட்டு எலும்பு தெரியும் வண்ணம் குரங்கு ஒன்று சுற்றித்திரிகிறது. இப்பகுதி வழியாக சென்ற வாகனத்தில் மோதி குரங்குக்கு அடிபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இடது கையில் ரத்தம் சொட்ட சொட்ட அங்குமிங்கும் அலையும் குரங்கைப் பார்க்கவே வேதனையாக இருப்பதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், தாங்கள் குரங்குக்கு அருகில் சென்றால் குரங்கு ஓடிவிடுகிறது. எனவே, வனத்துறையினர் குரங்கைப் பிடித்து சிகிச்சையளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்த புள்ளிமான் மீட்பு!