ETV Bharat / state

'விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு' - அமைச்சர் செந்தில் பாலாஜி - minister senthil balaji

விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் மின் இணைப்பு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Jan 23, 2022, 10:15 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி, கிணத்துக்கடவுப் பகுதிகளில் 212 கிராம மக்கள் பயன் பெறும் வகையில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர்த் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், '212 கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 62 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 72 கோடியில் புதிய கூட்டு குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சீராக விநியோகிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இலவச மின்சாரம் வேண்டி பதிவு செய்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போரில் ஒரு லட்சம் பேருக்கு முதலில் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுவரை 55 ஆயிரம் நபர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 4ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறுவதற்கான அனைத்துப் பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக 8ஆயிரத்து 905 மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

கூட்டு குடிநீர்த் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

தற்போது வரை 8 ஆயிரத்து 200 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுவிட்டன. இனிவரும் காலங்களில் விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கும் அளவுக்கு மின்வாரியம் தயாராகி வருகிறது' என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகன் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.