ETV Bharat / state

விளையாட்டு வீரர்களின் செலவை இனி திமுக ஏற்கும் - மட்டையைச் சுழற்றும் செந்தில்பாலாஜி - உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

கோவை மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களின் வெளிமாநிலப் போட்டிச் செலவுகளை திமுக ஏற்றுகொள்ளும் என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.

Minister
Minister
author img

By

Published : Nov 28, 2021, 8:19 AM IST

கோயம்புத்தூர்: திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 44ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை பீளமேடு பகுதியில் ஒருங்கிணைந்த திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை செந்தில்பாலாஜி பேட்டிங் செய்து தொடங்கிவைத்தார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளையும் தெருவித்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், கோவை மாவட்ட பள்ளி, கல்லூரிகளிலிருந்து இனி வேறு மாவட்டம், மாநிலத்திற்கு விளையாட்டுப் போட்டியில் பங்குபெறும் வீரர், வீராங்கனைகள் சென்று வரும் செலவினங்களை ஒருங்கிணைந்த திமுக ஏற்றுக்கொள்ளும் என உறுதியளித்துள்ளார்.

மேலும், இதற்காக பள்ளி கல்லூரிகளின் முதல்வரிடமிருந்து சிபாரிசு கடிதம் வாங்கி வந்தால் போதுமானது எனக் கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களின் வெளிமாநிலப் போட்டிச் செலவுகளை திமுக ஏற்றுகொள்ளும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி

கூடுதல் தகவலாக கோவை மாவட்டத்தில் மழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிங்க: Smart City Project: 10 மாநகராட்சிகளுக்கு ரூ. 4,794 கோடி செலவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.