உலகெங்கும் பரவிவரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கோவையில் பல்வேறு நகரப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரப் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக பூசாரிபாளையம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
சுமார் ஐந்து வாகனங்களில் பூசாரிபாளையம், வேடப்பட்டி பால் கம்பெனி போன்ற இடங்களில் மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின் அதிமுக சார்பில் மக்களுக்கு இலவச நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. இதனை அப்பகுதி மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க... கரோனா பாதிப்பு - துப்புரவுப் பணியாளர்களுக்கு தலைமை கொறடா பாராட்டு