ETV Bharat / state

கோவைக்கு வழங்கக்கூடிய குடிநீரை குறைந்தளவு வழங்கும் கேரளா - அமைச்சர் கே.என். நேரு குற்றச்சாட்டு

author img

By

Published : Jun 15, 2022, 6:18 PM IST

கோயம்புத்தூர் நகருக்கு சிறுவாணியில் அணையிலிருந்து வழங்கக்கூடிய குடிநீரை கேரள அரசு குறைத்து வழங்குவதாக அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் கே.என். நேரு ஆய்வு
அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 779 கோடி ரூபாயில் பில்லூர் குடிநீர் திட்டமும் மூன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை மாநகராட்சிப் பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும். மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து குழாய் மூலம் கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் தண்டிபெருமாள் கோயில் அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளதால் 3ஆவது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து, ராட்சத குழாய்கள் அமைக்க கடந்த 2021-ம் ஆண்டு 61 கோடியே 35 லட்சம் ரூபாயில், 900 மீட்டர் தூரத்துக்கு மலையைக் குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி 60 விழுக்காடு முடிவடைந்துள்ளது. இதரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மேட்டுப்பாளையத்தில் நடந்துவரும் பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கட்டஞ்சி மலை சுரங்கப்பாதை, மற்றும் நீரேற்று நிலையங்களை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கேஎன்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்ததாகவும், 'பில்லூர் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 178 எம்.எல்.டி குடிநீர் கோவைக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கேரளாவில் இருந்து 98 எம்.எல்.டி தண்ணீருக்குப் பதில், 39 எம்.எல்.டி குடிநீர் குறைவாக தான் தருவதாகவும்; அதை சரி செய்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும்; பில்லூர் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவுபெற்றால் 178 எம்.எல்.டி தண்ணீரும் கிடைக்கும்’ என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

மேலும், 2 மாதங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று கூறிய அவர், பில்லூர் அணையின் சேற்றை அகற்ற துறை அமைச்சரிடம் பேசி தூர் வாரப்படும் என்றும், தற்போது பில்லூர் குடிநீர் திட்டப்பணிகள் 60 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவின் ஒற்றைத்தலைமை யாருக்கு? - ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.