கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை உடுமலை சாலையில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளும் தினமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தேசியதரச்சான்று மருத்துவக்குழு ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான குழு, மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும் தலைமை மருத்துவர் ராஜாவிடம் கேட்டறிந்தார்.