ETV Bharat / state

மாசாணியம்மன் மயானக் கொள்ளை - மனித எலும்பைக் கவ்வி ஆக்ரோஷ நடனம்! - மனித எலும்பைக் கவ்வி ஆக்ரோஷ நடனம்

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சொக்கம்புதூர் மயானத்தில் நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

mayana kollai festival at masani amman temple

author img

By

Published : Feb 22, 2020, 9:23 AM IST

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை சொக்கம்புதூர் மயானத்தில் மயானக் கொள்ளை நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் சொக்கம்புதூர், மாசாணி அம்மன் கோயிலிலிருந்து பொதுமக்கள் ஊர்வலமாக வந்து அங்குள்ள மயானத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்திற்கு நள்ளிரவு பூஜைகள் செய்தனர். அப்போது கையில் அரிவாள், சூலாயுதத்துடன் மயானக் கொள்ளையில் ஈடுபட்ட பூசாரி, மாசாணியம்மனின் மண் உருவத்தைச் சுற்றி ஆக்ரோஷமாக நடனமாடியபடி பூஜை செய்தார்.

இதைத்தொடர்ந்து மாசாணியம்மனின் உருவத்திலிருந்த மனித எலும்புகளை எடுத்து வாயில் கவ்வியபடி நடனமாடினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பின்பு, மாசாணியம்மனின் உருவத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம்புதூரிலுள்ள மகாசக்தி மாசாணியம்மன் கோயிலுக்குக் கொண்டு சென்று, அங்கு அந்த மண்ணை வைத்து பூஜை செய்தனர் .

மாசாணியம்மன் மயானக் கொள்ளை

நள்ளிரவில் நடைபெறும் இந்த மயானக் கொள்ளை நிகழ்வில் கலந்துகொண்டு வழிபட்டால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது சொக்கம்புதூர் பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதேபோன்று கோவையிலுள்ள பல்வேறு கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு பூஜைகளானது நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.