வருடந்தோறும் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்வு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.
முருகனின் அறுபடை வீடுகள், ஏழாம் படை வீடாகக் கருதப்படும் கோவை மருதமலை முருகன் கோயில் என அனைத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வை நேரில் வந்து கண்டுகளிப்பது வழக்கம்.
இந்த வருடம் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கோவை மருதமலை முருகன் கோயில் சூரசம்ஹாரம் நிகழ்வில் பக்தர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சூரசம்ஹார நிகழ்வின் பொழுது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அதன்பின் கோயிலில் வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசங்களைக் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் பக்தர்களின்றி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. பக்தர்களின்றி நடைபெறுவது இதுதான் முதன்முறை எனக் கோயில் நிர்வாகத்தினரும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:உதயநிதி கைது: திமுக பொதுச்செயலாளர் கண்டனம்