50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் இன்று அகற்றப்பட்டது. அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டுவருகின்றன அதில் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் கடைகள் 88 கடைகள் உள்ளன. கூட்ட நெரிசலின் காரணமாகவும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறி சாலையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் கடைகள் அனைத்தும் நேற்றூ அகற்றப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக அந்த சாலையோர கடைகள் செயல்படுவதாகவும் சரக்குகளை மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு எடுத்துச்செல்ல சிரமமாக இருப்பதாலும் இந்த கடைகள் அகற்றப்பட்டன என்று மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக இந்த சாலையோர கடையை நம்பி வாழ்வு நடத்தி வரும் வியாபாரிகள் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் மோசமடைந்துவரும் உலகம்: வருந்தும் உலக சுகாதார அமைப்பு!